வாழ்வியல்

வாழ்வியல்

சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலாக அடிப்படை வசதிகள் உரிமைகள் அங்கீகாரம் ஏதும் இல்லாமல் கடை நிலை கொத்தடிமைகாளகவும் போதிய சமூக விழிப்புணர்வு கல்வி,பொருளாதாரம், அரசியல், விஞ்ஞானம் போன்ற துறைகளில் பங்கெடுக்க முடியாமலும் மிகவும் பின் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களின் நிலை மாற வேண்டும் என்றால் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அந்த அடிப்படையில் சமூகத்தில் அங்கீகாரமும், சட்ட பாதுகாப்பும். வாழ்வாதார உரிமையையும் மீட்டெடுக்க உதவியாக இருக்கும் என்பது ஐயப்பாடு ஏதும் இல்லை அதற்கு மந்திய மாநில அரசுகள் சரியான ஒரு ஆய்வு குழு அமைத்து ஒரு ஐந்தாண்டு திட்டம் வகுத்து ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் திட்டமிட வேண்டும். அதன் அடிப்படையில் இவர்கள் பிரச்சனை ஓரளவுக்கு தீர்த்து வைக்க முடியும். அதன்படி வாழ்வியல் முறையை முழுமையாக மாற்றிக் கொள்ளமுடியும் என்பது 40 ஆண்டுகால ஆய்வு மிக திடமாக உணர்த்துகிறது. இதுவே எங்களின் முழுமையான வேலை திட்டமும் ஆகும்.