கல்வி

கல்வி

இந்தியாவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் குடி சேவையும் குலத் தொழிலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக செய்துவரும் இந்த சலவை தொழிலாளர்கள் (வண்ணார் பிரிவினர் கொத்தடிமைகளாகவும், கிணற்றுத் தவளையாகவும் இருந்து வருகின்றனர், இதற்கு காரணம் சமூக அங்கீகாரமும், அறிவும், கல்வியும் போதிய அளவில் கிடைக்காததே. இதற்கு மாற்றுத் திட்டத்தின் மூலம் தடைஇல்லாமல் உயர் கல்வி செல்வதற்குரிய நிதி ஆதாரங்கள் என்பது தடையாகவும் உள்ளது. இவர்களுக்கு நிரந்தரமாக நிதி பிரச்சனை, பொருளாதார பிரச்சனை தீரத்து வைத்தால் மட்டுமே சமூகத்தில் போட்டி போட்டு உயர்கல்வியில் முன்னேற வாய்ப்பு உருவாகும். மத்திய மாநில அரசுகள் தனி திட்டம், சட்டம் வகுத்து செயல்முறைபடுத்த வேண்டும் என்பதை எங்களின்(WWC/WSDT) 140 ஆண்டுகால கள ஆய்வு உறுதிப்படுத்துகிறது.