இலக்கியம்

சலவை தொழிலாளர் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை (WSDT) நிர்வாகத்தின் மூலம் 23 ஆண்டு காலமாக தொடர்ந்து பல்வேறு இலக்கிய நிகழ்வுகளை நடத்தியும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டும் ஒவ்வொரு ஆண்டும் இலக்கிய விழாக்களை கொண்டாடுவது பத்திரிகை ( தனி சுற்றுக்கு ) நடத்துவது போன்ற இலக்கியத் துறையில் எண்ணற்ற நிகழ்வுகளை நடத்தி வருகிறோம். தொடர்ந்து நிதி ஆதாரங்கள் பற்றாக்குறை காரணமாகவும் வருவாய் இல்லாத காரணத்தினாலும் பொருளாதார சிக்கலில் துவண்டு இலக்கிய இதழ் நடத்த முடியாமல் உள்ளோம்.கலை,இலக்கிய,பண்பாட்டு நிகழ்வுகளில் எங்களுடைய பங்கை சொல்லத்தக்க அளவில் செய்து வருகிறோம். உங்களுடைய நிதியுதவி இருந்தால் மேலும் மேலும் இலக்கியத் துறையில் நீண்ட பயணம் சென்று வரலாறு படைப்போம்.

புதிய பயணம் சிறப்பிதழ் - 1

காஞ்சிபுரத்தில் 16-09-2012 அன்று தமிழ்நாடு வண்ணார் குல ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் வஞ்சிக்கப்பட்ட வண்ணார் குல வாழ்வுரிமை குறித்த முதல் கருத்தரங்கு பொதுச்செயலாளர் க.தேவராஜ் ஏற்பாடு செய்திருந்தார், கூட்டத்திற்கு அதன் தலைவர் த.ம.பிரகாஷ் தலைமை வகித்தார், கருத்தரங்கில் பல்வேறு உயிரோட்டமான  பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. காஞ்சிபுரம் கருத்தரங்கு குறித்து 10-02-2013 அன்று சிறப்பு இதழ் புதிய பயணம் -2 வெளியிடப்பட்டது. இதழ் ஆசிரியர் த.ம.பிரகாஷ் ஆசிரியர் குழு இரா, தங்கவே ல், ஐதராபாத் ராஜா, விழுப்புரம் சண்முகம், கே.முத்துகுமார், காஞ்சிபுரம் நயாகரா க.தேவராஜன் காஞ்சிபுரம் விஜியகுமார் ஆகியோர்  பங்காற்றினார்கள்.

நூலின் பக்கம் 68 – நன்கொடை   ரூ 50. (இதழ் கை இருப்பு ) 

புதிய பயணம் சிறப்பிதழ் - 2

புதிய பயணம் இதழ்-3, காலாண்டு இதழாக ஜூலை 2013 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இவர்களின் பார்வைக்கு என்னும் பெயரில் 234 சட்டமன்ற உறுப்பினர்கள், 39 பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கும் இந்த இதழ் கொண்டு போய்  சேர்க்கப்பட்டது. ஆனால் அரசியல் மெத்தனப்  போக்கு  எவ்வளவு மோசமாக  உள்ளது என்பதை இந்த இதழ் மூலமாக  மேலும் தெரிந்து கொள்வதற்கான  ஒரு வாய்ப்பு உருவானது, இந்த அரசை நாம் தான் தேர்வு செய்கிறோம். ஆனால் இனி நிர்வாகம் நமக்கானதா என்ற கேள்வி நமக்கு பெருத்த சந்தேகத்தை உருவாக்குகிறது, இந்த இதழின் சிறப்பு என்னவென்றால் தமிழக சலவைத்துறைகள் எந்த அளவுக்கு அரசு கண்டுகொள்ளாமல்   சீரழிந்து உள்ளது என்பதையும் குறிப்பாக நாய்களுக்கும் பன்றிகளுக்கும் கூட ஒரு நல்ல கூடங்கள் அமைகிறது ஆனால் பொதுமக்கள்  உடுத்திகளையும் ஆடைகளை சுத்தம் செய்வதற்கு சுகாதாரமான சலவைத்துறை இதுனால் வரை கட்டிக் கொடுக்கவில்லை  இதை ஏன் அரசு உதாசீனப்படுத்தியது என்ற கேள்வியோடு  இதழில் செய்தி பதிவாகி உள்ளது. மேலும் முதல் முதலில் மாநில அளவில் ஒரு பெரிய சங்கத்தை உருவாக்கியவர் சேலம் சின்னசாமி இவரின் வாழ்க்கை வரலாறு முழுமையாக இடம் பெற்றுள்ளது, கூடவே தமிழகத்தில் பெரிய சங்கமாக கூறப்படும் சலவையாளர் மத்திய சங்கத்தின் முழுமையான வரலாறு அந்த சங்கத்தில் உள்ளவர்களுக்கே தெரியாது என்பதுவியப்பாக இருந்தது, அத்தகைய வரலாறை தேடி பிடித்து மூன்றாவது இதழில் இடம் பெற செய்திருப்பது மேலும் ஒரு சிறப்பாக அமைந்துள்ளது, தமிழகத்தில் முக்கியமாக சங்கப் பணியில் சிறப்பாக பணியாற்றி வரும் திருக்குறிப்புத் தொண்டர்  பேரவையின் வரலாற்று பூர்வமான கட்டுரையும் அதன் தலைமையின் சிறப்புபற்றியும் ஆசிரியரும் புலவருமான பூண்டி ராமசாமி அவர்கள் ஒரு கட்டுரையை இடம்பெறசெய்துள்ளார். கொங்கு  மண்டல பண்பாட்டு அடையாளம் ‘மாறாயம்’ என்னும் கட்டுரையை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தில் பல ஆண்டு பொதுச்செயலாளராக பொறுப்பு  வகித்தவரும் இலக்கியத்தில் நமக்கு எல்லாம் முன்னோடியாக  விளங்கிவரும் அரூரில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற அண்ணன் ரவீந்திரபாரதி அவர்களின் கட்டுரை இடம்பெற்றுள்ளது, இந்த இதழில் சிறப்பு, மேலும் பல்வேறு அரசியல் தளத்தில் நமது கோரிக்கைகள்  எப்படி எல்லாம் உதாசீனப்படுத்துகிறது என்பதற்கு உதாரணமாக பல்வேறு செய்திகள் பதிவு ஆகியுள்ளது. பொதுவாக  இந்த இதழ் தமிழக வண்ணார் குலத்திற்கு சிறப்பான ஒரு ஆவணமாக அமைந்துள்ளது , இதழ் தற்போது கையிருப்பு கிடையாது .

 

 இந்த இதழ் வெளியீடு தமிழ்நாடு வண்ணார் குல ஒருங்கிணைப்புகுழு பிரச்சார பிரிவு, பக்கம் 68, விலை ரூபாய் 50.

புதிய பயணம் சிறப்பிதழ் - 3

புதிய பயணம் இதழ் -4, நவம்பர், டிசம்பர் 2012 லும் , ஜனவரி 2013லும் 1000 படிகள் கொண்டு  வரப்பட்டது, 50 பக்கம் கொண்ட இந்த இதழின் விலை ரூ. 25. ஏகாலியர் ஊர் மடம் என்ற உமிக்கரிமடத்துக்கல்வெ ட்டு என்ற கட்டுரையை மாவட்டத் தொல்லியல் அலுவலர் திரு தே .கோபாலனும் ,தெருக்கூத்து, கூத்தரசியல் என்ற கட்டுரையை வேலுசிவராமனும், தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் தமிழக வண்ணார் குலம் குறித்து மூ.கீதாம்பரி M.Sc.,B.Ed அவர்களின் மொழி பெயர்ப்பு கட்டுரையும் ,அமரர் சி.வி.முனுசாமியின் வாழ்வின் சுவடுகள் குறித்த செ.து.சஞ்சீவி அவர்கள் எழுதிய கட்டுரையும், எஸ்.பிரகாஷ் மற்றும் சுகுமார் எழுதிய அரசு நிர்வாகத்தில் சூரையாடப்படும் யானைகளின் வாழ்வுரிமை கட்டுரையும்,பாலவர் வையவனின் மகாத்மா ஜோதிராவ் பூலே கவிதையும், புலவர் வி.பார்த்திபன் B.Lit, அவர்களின் இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் தியாகி மு.அய்யன் கட்டுரையும் , நயாகரா தேவராஜ் , சு.துரை BE., பெ.குமாரசாமி போன்றவர்களின் கட்டுரைகளும் இந்த இதழில் இடம் பெற்றுள்ளது.

வண்ணத்தார் கதைகள்

வண்ணத்தார் கதைகள் என்னும் சிறுகதைகளின் தொகுப்பு  செ.து.சஞ்சீவி அவர்கள் எழுதிய 15 சிறுகதைகளின் தொகுப்பாகும்.  இந்த கதைகள் வரலாறு, இலக்கியம், பண்பாடு ,வாழ்வியல் போன்ற  நிகழ்வுகளோடு வண்ணத்தார் கதைகளை இணைத்து எழுதியுள்ளார்.இது போன்ற சிறுகதைகள் பல்வேறு உண்மை வரலாறுகளையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இந்த
அற்புதமான சிறுகதை தொகுப்பு, தமிழக வண்ணத்தார் மக்களுக்கு மிகச்சிறப்பான நிகழ்வுகளை கண்முன் கொண்டு  வந்து நிறுத்துகிறார் , இதனால் அவர்களுக்கு சொந்த  வரலாறும் அவர்களுக்கு உள்ள சுயமரியாதையும், பெருமையும் நன்கு புரிந்து கொள்வார் என்ற நம்பிக்கையில் இந்த நூலை படைத்துள்ளார், இந்த நூலை பற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர்  இரா.நல்லக்கண்ணு அவர்கள் என்னிடம் (த.ம.பிரகாஷ் ) பெருமைப்பட பேசி உள்ளார் நூல் ஆசிரியர் தோழர்  சே.து.சஞ்சீவி அவர்களை மனம் திறந்து பாராட்டி புகழ்ந்துள்ளார், ‘இது போன்ற  படைப்புகள் மக்களுக்கு அவர்களின் கடந்த கால வரலாறை நினைவூட்டும் வகையில் அமைப்பது சாலச் சிறந்தது வாழ்த்துகிறேன் பாராட்டுகிறேன் என்று கருத்து தெரிவித்தார். ‘இது போன்ற மாமனிதர்களின் பாராட்டுகளையும் வாழ்த்துகளை யும் பெற்ற நூல் வண்ணத்தார் சிறுகதை தொகுப்பு  வண்ணத்தார்களின் சமூக இளைய தலைமுறை நன்கு கொண்டாடப்பட வேண்டிய சிறந்த நூலாகும் மாற்றுத் தொழிலுக்கு வழிவகை செய்யக்கூடிய வழிகாட்டியாகவும் இந்த நூல் திகழ்கிறது, பொதுவாக சமூக மாற்றத்திற்கு உகந்த நூல் வண்ணத்தார் சிறுகதைகள்.

ஆசிரியர் : சேது சஞ்சீவி பதிப்பு ஆண்டு 2008
நூலின் அளவு 1 /8. டம்மி நூலின் மொத்த பக்கங்கள் 176 ,
நூலின் விலை ரூபாய் 55,
நூல் கிடைக்கும் இடம் :அண்ணல் வெளியீடு,
எண் 4 பழை ய எண் 38, கலை மகள் நகர் இரண்டாம் முதன்மை, இக்காட்டுத்தாங்கல், சென்னை குறியீட்டு எண் 600032

தொலைபேசி  எண் 222 50 80

கோவேறு கழுதைகள்

கோவேறு கழுதைகள் நூல் குறித்த அறிமுகம் தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுக்க சாதிரீதியாக மக்கள் கூடி வாழும் பகுதிகள், வீதிகள் என இரண்டாயிரம் ஆண்டுக்கு மேலாக சாதி படிநிலை நிலைநிறுத்திவைக்கப்பட்டு வந்துள்ளது. அந்த அடிப்படையில் தமிழகத்திலும் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே காலகாலமாக மனிதநேயத்திற்கு ஒரு சதவிகிதம் கூட ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் சாதிக் கொடுமைகள் உள்ளது என்றால் மிகமையாகாது, நிச்சியமாக சமரசமின்றி உறுதியாக நம்பலாம், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தில் இல்லாத சாதியபடிநிலை தமிழகத்தில் உள்ளது.  அதுவே புரத வண்ணார், புரத்து வண்ணார், புதிரை வண்ணார், சரி வண்ணார், பறஏகாலி, சக்கிலி வண்ணார், ஆதிதிராவிட வண்ணார் என்று பல பகுதிகளில் வட்டத்திற்கு ஏற்றவாறு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி அழைக்கிறார்கள்,  இவர்களை பற்றி எழுத்தாளர் இமயம் ஒரு நாவல் எழுதியுள்ளார் முழுக்க முழுக்க சேரியில் குடி சேவையை குலத்த தொழிலாகச் செய்துவரும் கிருஸ்துவ மதம் மாறியுள்ளவர்களை ( RC) பற்றிய முழு நாவல்,  இந்த நாவலை க்ரியா பதிப்பகம் 2013ல் வெளியிட்டது, கோவேறுகழுதைகள் நாவலை சலவைத் தொழிலாளர் நலக்குழு, முற்போக்கு எழுத்தாளர் சங்கம், துரும்பர் விடுதலை இயக்கம் தமிழக அளவில் மிக வேகமாக திரிந்து அலைந்து வாசகர்கள், மக்களிடம் கொண்டு போய் சேர்த்தது இந்த இரு அமைப்பு நிர்வாகம், இதுவரை 5 பதிவுகளாக வெளிவந்துள்ளது.

தற்போது  நாவலின் விலை ரூ. 300 – நூல் கிடைக்கும் இடம் :
புதிய எண் 2, பழைய எண் 25,

17வது கிழக்கு சாலை ,காமராஜர் நகர்,

 திருவான்மியூர்,சென்னை -600041. 

தொடர்புக்கு 72999 05950

ஊருக்கு ஒரு குடி

ஊருக்கு ஒரு குடி நூலில் மதம்மாறிய கிறிஸ்துவ சலவைத் தொழிலாளர்கள் உள்ளார்கள் ஆதி திராவிட பிரிவை சேர்ந்தவர்கள் இவர்கள் வசிக்கும் பகுதிகளில் அந்தப் பகுதி மக்களின் மூலம் எவ்வளவு இன்னல்கள் தொல்லைகள்  பரிகாசங்கள் வன்முறை சூரையாடல்கள் ஊரை விட்டு விரட்ட அடிப்பது ஒட்டுமொத்தமாக  சமூக பாதுகாப்பு என்பது நிச்சயமாக கேள்விக்குறியாக இருந்து வருகிறது என்பதை ஆசிரியர் ஜூலியஸ் தெளிவாக படம் பிடித்து எழுதியிருக்கிறார் மேலும் அந்த குடும்பத்திற்கு அரசாங்கம் எந்த வகையில் உறுதுணையாக இருக்கிறது அல்லது இல்லை
என்பதை தெளிவாக ஆய்வு செய்து பட்டறிவில் கண்டதை அப்படியே பகட்டுத்தனம் இல்லாமல் பதிவு செய்திருக்கிறார் தமிழகத்தில் (ஆர் சி) கிறிஸ்தவ மதம் மாறியவர்கள் இவர்கள் பெரும்பாலும் ஆதி திராவிட மக்கள் வசிக்கும் பகுதிகளில் வசித்து வருகின்றனர் அல்லது குலத்தொழில்  செய்து வருகிறார்கள் என்பது பொருந்தும் . 

 

 

ஊருக்கு ஒரு குடி நூல் ஆசிரியர் : ஜூலியஸ்,
வெளியீடு,
பூபாளம் பதிப்பகம் ,
தமிழ் இல்லம் , முத்துவரீக்கண்டியன்பட்டி ,
பூதலூர் (வழி) தஞ்சாவூர் ,
அ.கு. எண் 613 602,
பக்கம் 176 
விலை ரூபாய் 170