ஒதுக்கப்பட்ட/ஒடுக்கப்பட்ட சலவைத் தொழிலாளர்களுக்கான (வண்ணார், SC, MBC, BC) நலப்பணியில் நாற்பதாண்டு கால (1983-2023) தொடர் பயணத்தின் சுருக்கம்

Menu

உவர்மண்

ஒதுக்கப்பட்ட/ஒடுக்கப்பட்ட சலவைத் தொழிலாளர்களுக்கான
(வண்ணார், SC, MBC, BC) நலப்பணியில் நாற்பதாண்டு கால (1983-2023)
தொடர் பயணத்தின் சுருக்கம்

         அன்பிற்கினிய தமிழக வாழ் மக்களாகிய உங்கள் அனைவருக்கும் சலவைத் தொழிலாளர் சமூக மேம்பாட்டு அறக்கட்டளையின் (WSDT) சார்பாக பணிவான அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதில் பெருமை கொள்கிறோம். நாங்கள் கடந்து வந்த பாதையில் தடம் பதித்த நலப்பணிகளின் விவரங்கள்: 

           பகுதி வாழ் மக்கள் உடுத்திகளையும் ஆடையை சுத்தம் செய்வதற்கு சுகாதாரமான முறையில் சலவை செய்து கொடுப்பதற்கான முதற்கட்ட பணியை அரசுக்கும் திருவண்ணாமலை நகராட்சிக்கும் 1983ம் ஆண்டு கோரிக்கை வைத்தது.

          20-05-1991-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. சலவைத்துறை சலவைத்தொழிலாளர் நலக் குழுவிடம் 1993-ல் ஒப்படைக்கப்பட்டது. சலவைத் துறை பயனாளிகளும் சலவைத் தொழிலாளர் நலக்குழு (WWC) நிர்வாகமும் இணைந்து 10 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து சலவைத்துறையை பாதுகாத்து பராமரித்து பயன்படுத்தி வருகிறோம். இதன் காரணமாக திருவண்ணாமலையில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்து வருகிறார்கள். அத்துடன் சலவைத்துறை வாடிக்கையாளர்கள் ஒரு லட்சம் மக்கள் பயனடைந்து வருகிறார்கள்,தமிழக அளவில் சலவைத்தொழிலாளர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இன்று எல்லா இடங்களிலும் சலவைத்துறையை அல்லது தனித்தனியாக சலவைத்துறை அமைத்து சுகாதாரமான முறையில் மக்களுக்கு ஆடைகளை சுத்தம் செய்து தரும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்றால் அது மிகமையாகாது. 

         2003-க்கு பிறகு சலவை தொழிலாளர் நலக்குழு பெயரை மாற்றி 2004 முதல் சலவைத்தொழிலாளர் சமூகம் மேம்பாட்டு அறக்கட்டளை( WSDT) என்னும் பெயரில் பதிவு செய்து அன்று முதல் இன்று வரை (2023) மேற்கண்ட சலவைத்தொழிலாளர் (வண்ணார்) மக்களுக்காக தொடர்ந்து தமிழக அளவில் பல்வேறு நலப்பணிகள் செய்து வருகிறோம்.

நாற்பது ஆண்டுகால

நிகழ்வுகளின் பயணம்


DSC_3143
DSC_3139
DSC_0021
DSC_0082
DSC_0145
DSC_0156
DSC_0021
DSC_0037
DSC_0018
DSC_0049
DSC_0005

0
+
ஆண்டுகாலமாக

சேவையில்

0
+
.

நிகழ்வுகள்

0
+
.

பயன் அடைந்தோர்