WSDT

வரலாறு

  • பகுதி வாழ் மக்கள் உடுத்திகளையும் ஆடையை சுத்தம் செய்வதற்கு சுகாதாரமான முறையில் சலவை செய்து கொடுப்பதற்கான முதற்கட்ட பணியை அரசுக்கும் திருவண்ணாமலை நகராட்சிக்கும் 1983-ம் ஆண்டு கோரிக்கை வைத்தது, 20-05-1991-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. சலவைத்துறை சலவைத்தொழிலாளர் நலக்குழுவிடம் 1993-ல் ஒப்படைக்கப்பட்டது . சலவைத்துறை பயனாளிகளும் சலவைத்தொழிலாளர் நலக்குழு (WWC) நிர்வாகமும் இணைந்து 10 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து சலவைத்துறையை பாதுகாத்து பராமரித்து பயன்படுத்தி வருகிறோம். இதன் காரணமாக திருவண்ணாமலையில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்து வருகிறார்கள் .அத்துடன் சலவைத் துறை வாடிக்கையாளர்கள் ஒரு லட்சம் மக்கள் பயனடைந்து வருகிறார்கள்,தமிழக அளவில் சலவை தொழிலாளர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இன்று எல்லா இடங்களிலும் சலவைத்துறையை அல்லது தனித்தனியாக சலவைத்துறை அமைத்து சுகாதாரமான முறையில் மக்களுக்கு ஆடைகளை சுத்தம் செய்து தரும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்றால் அது மிகமையாகாது.
  • 2003-க்கு பிறகு சலவைத்தொழிலாளர் நலக்குழு பெயரை மாற்றி 2004 முதல் சலவைத்தொழிலாளர் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை( WSDT)என்னும் பெயரில் பதிவு செய்து அன்று முதல் இன்று வரை  (2023 )மேற்கண்ட சலவைத் தொழிலாளர்( வண்ணார்  )மக்களுக்காக தொடர்ந்து தமிழக அளவில் பல்வேறு நலப்பணிகள் செய்து வருகிறோம்.
  • சலவைத்துறை வளாகத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்களை கொண்ட நூலகம் WSTD மூலம் இயங்கி வருகிறது.
  • 24 மணி நேரமும்  தொழில்  செய்வதற்கான  உகந்த பாதுகாப்போடு தண்ணீர் வசதியுடன் சுகாதாரமான முறையில் சலவைத்துறை இயங்கி வருகிறது.
  • குழந்தைத்தொழிலாளர்கள்  முறை முறையாக முழுமையாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
  • பகுதி வாழ் பெண்களும் சலவைத்தொழில் செய்யும் பெண்களும் முழுமையான சமூக பாதுகாப்புடன் பணி செய்து வருகிறார்கள்.
  • பகுதி வாழ் மக்களுக்கு பொழுதுபோக்கு அம்சமாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.சமூக விழிப்புணர்வு நாடகங்கள் நடத்துவதற்கான கலை குழுக்கள் அமைத்து செயல்பட்டு வருகிறது.
  • பண்பாட்டு அடையாளமாக பொங்கல் திருவிழா, மயிலாறு திருவிழா, தமிழர் திருவிழா போன்ற விழாக்களை நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வும் 40 ஆண்டு காலமாக தொடர்ந்து செய்து வருகிறது.
  • இளைய தலைமுறையினரின் நலனுக்காக உடற்பயிற்சியும்விளையாட்டுப் போட்டிகளையும் மற்றும் யோகா வகுப்புகளையும் நடத்தி வருகிறது.
  • மாணவ மாணவிகள் கல்வி பயில்வதற்கு முழுமையான ஆலோசனை மற்றும் நிதி உதவி வழிகாட்டுதல் முறையை தொடர்ந்து செய்து வருகிறது.
  • கூட்டுக் குடும்ப உறவு முறையை முறையாக பாதுகாத்து வருவதற்கான ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
  • சீரழிவு பாதையில் உள்ள இளைய தலைமுறையினரை உரிய முறையில் அறிவுரை வழங்கி மருத்துவ வசதி கொடுத்து பாதுகாத்து நல்வழிப்படுத்தி வருகிறது.
  •       முதியோர்களுக்கு உரிய முறையில் பாதுகாப்பு வழங்கி வருகிறது.
  •       சலவைத்துறை வாரம் ஒரு முறை சுகாதாரமான முறையில் சுத்தம் செய்து பராமரித்து விடுமுறை கடைபிடிக்கப்படுகிறது.
  •       சலவைத்தொழிலாளர்களின் வாழ்வியல் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.
0 +
ஆண்டுகாலமாக
சேவையில்
0 +
.
நிகழ்வுகள்
0 +
.
பயன் அடைந்தோர்