சலவைத் தொழிலாளர்கள் (வண்ணார் பிரிவினர்) வஞ்சிக்கப்பட்ட வரலாறு ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக குடி ஊழியமாக இருந்து குலத் தொழிலாக மாறி இன்றைய விஞ்ஞான காலம் வரை தொடர்ந்து மக்களின் வாழ்வாதாரத்தை மறுக்கப்படுவதுடன், பறிக்கப்படும் நிலையில் தொடர்ந்து போராடும் நிலையே இருந்து வருகிறது. உதாரணத்திற்கு அவர்கள் தொழில் செய்து வந்த நீர் நிலைகள், உவர்மண்கள், வெள்ளாவி அடுப்புகள், மற்றும் தொழில்கள் அனைத்தும் பறிபோனது. அதற்கு மாற்றாக மாற்றுத் தொழில் செய்வதற்கு தொடர்ந்து 40 ஆண்டுகள் மேலாக மத்திய மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக போராட்டம் ஜனநாயக ரீதியில் இன்று வரை நடுவீதியில் இறங்கி போராடி வருகிறோம். எந்த அரசும் எங்கள் கோரிக்கையை செவி சாய்க்கவில்லை.