மாற்றுத் தொழில்
Menu
மாற்றுத் தொழில்
சலவைத்தொழில் செய்து வரும் (வண்ணார் பிரிவினர்மக்களுக்கு)
- மாற்றுத் தொழில் என்பது காவத்தின் தேவையும் கூட காரணம் ஆண்டாண்டு காலமாக நிரந்தர கொத்தடிமைகளாக எந்த விதமான சலனமும் இல்லாமல் குடும்ப குடும்பமாக வாழையடி வாழையாக குலத்தொழில் செய்து வரும் இந்த மக்கள் மாற்று தொழில் செய்வதற்கு உரிய நடவடிக்கையை மத்திய மாதில் அரசுகள் கூட்டு முயற்சியாக திட்டமிடுவதும், சட்டம் எழுதுவதும் அதை பகுப்பாய்வுடன் நடைமுறைப்படுத்துவதும் காலத்தின் தேவையாக உள்ளது.
- அதற்கிடையில் முறையான கணக்கெடுப்பும் பொருளாதார பிரச்சனையும் கணக்கில் கொள்வதற்கு ஒரு ஆய்வுக் குழுவை ஏற்படுத்தி அதன் மூலம் தீர்வு காண வேண்டும் என்பது எங்கள் 40 ஆண்டுகாளஆய்வின் நிலையாகும். தொழில் மாற்றத்துக்கு தேவையான வங்கிகள் மூலமும் தொண்டு நிறுவனங்கள் மூலமும் குறைவான வட்டிக்கு சொந்த ஜாமினில் நிதி உதவி அளிக்க முன்வர வேண்டும்.
- அதற்கு சடங்குத்தனம் இல்லாமல் வங்கிகளுக்கு முறையான உத்தரவு தேவையாக உள்ளது. அப்படி இருந்தால் ஐந்தாண்டில் குலத்தொழில் முறையை மாற்று தொழில் மூலமாக நிரந்தரமாகவும் உறுதியாகவும் மாற்றிக் கொள்ள முடியும் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக குடி ஊழியம் செய்து குலத்தொழிலாக மாற்றம் கண்ட பின் மனித உரிமை மறுக்கப்படுவதும், சம்பந்தப்பட்ட தொழில் செய்யும் தொழிலாளர்களை தையாண்டி செய்வதும்.
- கேவலமாக சிந்தரித்து பேசுவதும் வாழ்வாதாரத்தை பறிப்பதும் சமூக பாதுகாப்பு வளையத்திற்கு அப்பால் தள்ளி வைப்பதும், சிறார்கள். முதல் பெரியோர்கள் வரை மனித நேயம் இல்லாமல் விரட்டி விரட்டி குலத் தொழிலாளர் என்ற முறையில் அவமதிப்பதும், இழிவு படுத்துவதும்.
- காலகாலமாக அவமதிப்பு தொடர்கிறது. மேலும் மேலும் அவர்கள் மீது வன்முறை தாக்குதல் தொடர் நிகழ்வாக உள்ளது. சராசரியாக எல்லா சிற்றூர்களிலும் நகரங்களிலும் இன்றும் நிலையாக அரங்கேறி வருகிறது. சமூகத்தில் மற்றவர்களைப் போல் சக மனிதர்களாக இந்த மக்களை மதிக்க வேண்டும்.
- என்றாய் அரசு தனிக் கவனம் செலுத்தி செயல்திட்டத்தை அக்கறையுடன் செயலாகி நடந்தாய் மட்டுமே சாத்திய கூறு உருவாகும் அத்துடன் சமமான அங்கீகாரம் கிடைக்கும் என்பது எதார்த்தமானதுரி.