சமூகவாழ்வில் பண்பாட்டு அடிப்படையில் உலக மக்களுக்கு உணவளிக்கும் உழவர்களுக்கு நன்றி சொல்லும் வகையில் உழவர் திருநாள் விழா சலவை தொழிலாளர்களால் இரண்டு நாள் விழாவாக தொடர்ந்து 23 ஆண்டு காலமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது அந்த விழாவில் உரி அடிக்கும் போட்டி கபடி மிதிவண்டி போட்டிகயிறிழுத்தல் போட்டி கோலப்போட்டி, ஓவிய போட்டி இசை நாற்காலி போன்ற 20 க்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டு பொது மேடையில் அனைத்து கலைஞர்களையும் போட்டியில் வெற்றி பெற்றவர்களையும் பாராட்டி அன்று இரவு நடைபெறும். கலைநிகழ்ச்சிகளில் பரிசுகள் வழங்கப்படும்.